சமன்பாடா முரண்பாடா….

வாழ்வெனும் கற்கோயில் வார்ப்பாக்கும்
வரைமுறையின் எழில்கோலம் உராய்ந்து கொள்ளும்
பாத்திரத்தில் உருவெடுப்பில் படி அமைத்து
பாரிற்குள் உயிர்ப்பெழுதும் சான்றின் கல்லே
உலகத்தின் தாரசிற்குள் இருதட்டாய்
இருபாலர் வாழ்விற்குள் உராய்வெட்டாய்
தாய்மைக்குள் பெண்மையை தரிக்க வைத்தாய்
தரணிக்குள் உறவெழுத உயிர்ப்புத் தந்தாய்
உறவுமுறை யாப்பிற்குள் பற்பலதாய்
உடமைகொள் சிறப்பிற்குள் முகவரியாய்
துணையெனும் தூண்டில் விளக்காகி
துரிதத்தில் வாழ்க்கைக்கு வரம்பமைப்பாள்
கல்லுளியால் வார்ப்பெழுதும் சித்திரம் போல்
கடைமைகளை செப்பனுற வார்த்தெழுதும்
வார்ப்பில்லா வரைமுறையில் சிறகடிக்கும் வாழ்வெனும் ஒடத்தின்
சூத்திரங்கள் சமன்பாடா? முரண்பாடா?
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan