உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்

பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து குழந்தையின் முகத்தை பார்ப்பாள் பிரசவித்த வேதனையும் மறப்பாள் உதிரத்தை பாலாக்கி ஊட்டி...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

பெருமை
^^^^^^^^^^^^^^

பொறுமை என்பது செயலின் பெருமை
சிறுமை இன்றியே நடப்பதே அதன் மகிமை

வறுமை வந்தாலும் வரம்பு மீறாதது திறமை

முறமை இன்றியே அறம் காப்பது புதுமை

கனிந்த நல்மனதினிலே கருணையின் பிறப்பும்

இனித்திடும் நிலையிலே இன்பத்தின் உயிர்ப்பும்

தனித்துவம் சிறந்திட தன்மானத்தின் செழிப்பும்

மானிலமே போற்றி நிற்க மங்காத பெருமை கொள்வாய்

சீறாதே சினக்காதே சிதறியும் நடைபயிலாதே

வெறுக்காதே ஒதுக்காதே வெற்றியோடு நடைபோடு

மாறாதே மறுக்காதே மாண்பு கொண்ட பாதையைநீ

தூற்றாதே துவைக்காதே தூய்மையான அன்பினையும்

இத்தனையும் வேண்டும் அத்தனையும் பெருமையாகும்

பற்றிவிட்ட கொள்கையிலும் பக்திநெறி தளைத்தோங்கும்

வித்திட்ட முளைதானே துளிர்விட்ட பெரும் விருட்சம்

அத்தனையும் அடைந்திருந்தால் அறமோங்கப் பெருமைசேரும்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan