சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1934…

காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தந்தாய்…!

மூச்சுக் காற்றில்
உயிர்த்த குரற் பூவாகி
பல்லோரும் செவி ஏற்கப்
பக்குவமாய் ஆளாக்கினாய்
இனிதெனக் குரலிடை
இழையோடி நீ சேர்ந்தாய்
இணையத்தின் துணையோடு
எனை ஆளாக்கினாய்…!

மொழியென ஊற்றாக்கி
மொழிந்திடும் பேறாகினாய்
வழித்தடம் மாறாமல்
வழிகாட்டி எனைத்தாங்கி
உழிகொண்டு செதுக்கினாய்
உரிமையோடு சுவை கூட்டினாய்
காற்றலை செவி உட்புகுந்து
தோற்றலை மாற்றி வெற்றியே
என் வாழ்வாக்கினாய்…!
சிவதர்சனி இராகவன்
15/2/2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading