சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பி161 பெருமை
உடையார் பரம்பரை
ஊரில் தலை முறை தலைமுறை
வழியாய் வந்த எம் வம்சம்
வழி இன்றி அலைகுது எங்கும்
மெத்தை வீட்டை போரில்
ஒற்றை கூரையும் இல்லாமல் செய்தது பொம்பர் குண்டு
மெத்த பரந்த காணி வயல் தோட்டம் இன்னும்
பற்றை காடாய்
ஆமி பிடித்த காணி மீளுது
அயல் உறவு பாவி பிடித்த
வயல் காணி இன்னும் வழக்கில்
செம்பு தண்ணி முதல்கை பரம்பரை
அண்டி வாழ்ந்த குடிகளில் கட்டி அழகாய்வாழுது
கனடாவில்
சாதி சனம் குடிப்பெருமை பரம்பரை பேர்
ஊரில் சாதித்ததை
காசு பணமே காட்டுது இன்று பெரிசாய்
வள்ளம் ஒருநாள் ஓடத்தில் ஏற
வள்ளத்தில் ஒருநாள் ஓடம் ஏற
பெருமை,சிறுமை எல்லாம்
ஒருநாளில் மாறும் நிலமை
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading