சிவரஞ்சினி கலைச்செல்வன்

குற்றச் செயல்கள் கூடிய நாடு
கொலைகள் களவு தினம் தினம் நூறு
பற்று பாசம் பந்தம் மறந்து
பையன் தாயை கொல்வது நடப்பு

ஆசை மீறி அடாத்துகள் கூடி
அடுத்தவன் போல வாழ தாகம்
மோசடி செய்ய ஆசைகள் உந்த
களவு வன்முறை கனத்து போச்சு

பட்டினி உணவு பஞ்ச திருடு
பகட்டு ஆடை நகைக்கு திருடு
முட்ட குடிக்க மோகத்தில் திழைக்க
அவரவர் தேவை மோசடி ஆகி.

புலம் பெயர்ந்தோரின் பணத்தில் வாழ்வு
பொழதும் நாளும் உல்லாச வாழ்வு
உறவுகள் இல்லார் ஆசைகள் கூட
உறுத்திட தேவை குணத்தையே மாற்ற

சட்டம் இருந்தும் கட்டுப்பாடில்லை
சட்டத்தை ஆள்வோர் கொட்டம் கூட
எப்படி நாடு உருப்படும் ?கேடு
இல்லாமை கூட இன்னும் கூடும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading