சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் __103
“தவிப்பு ”

முள்ளியில் நடந்த
மும்முனை போரில்
முழுவதுமாய் அழிந்தது
எம் இனம்

ஒன்றா இரண்டா சொல்வதுக்கு

என் சகோதரி
ஆனந்தபுர சமரில்
வீரமரணம் அடைந்தாள்
மைத்துணர் காணாமல் ஆக்கப்பட்டார்!
தவித்து நின்றோம்

வெள்ளை கொடியுடன் சென்ற சமாதான புறாக்கள் இற்றவரை ஏதும் அறியாமை தவிப்பு

அக்காவின் குழந்தை
அம்மாவின் முகம் மறந்து போச்சு
அப்பாவின் நிழல் கூட தெரியாது

பெரிய தாயின்
அரவணைப்பில் பூவாய் பூத்து
காயாய் கனிந்து
மரமாக செழித்து நிற்கின்றாள்

பெரியம்மாவை
அம்மா என நினைத்து வாழும்
சின்னவளால்
என்னவளால் தவிப்பு!!
தவிப்பின் மேல்
தவிப்பில் நாம்!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan