சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 105

“ஆற்றல் ”

ஆற்றல் கொண்டு
ஆழுமை திறனுடன்
அச்சம் இன்றி
எதையும் சதிக்கலாம்

வல்லமை கொண்டு
வலிமை மிக்கவராய்
வன்முறை இன்றி
வசதியாய் வாழலாம்

மனிதனின் திறமை
எட்டி பார்க்க முடியாது
ஏற்றம் கொண்டு போகுது
ஏணி வைத்தும் ஏற முடியாது

அறிவியல் திறமையால்
அவதாரம் எடுக்கிறான்
பொறியியல் உலகம் புலமையை பாராட்டுது

இயந்திரத்திற்கு நிகராய்
இயங்குகின்றான் மனிதன்
ஈடு அற்ற உழைப்பு
ஈட்டி போல் பாய்கின்றான்

இயந்திர ஆற்றலில்
இயங்கும் மனிதன்
இன்னல்களை
சுமந்து
இம்சையுடன் வாழ்கின்றான்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading