சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 110
மூண்ட தீ

யாழ் நூலகம்
அனைத்துலக அளவில் அதிகம் பேசப்பட்டதே

ஆர்வலர்களின் அயராத
உழைப்பின் உன்னதம்
ஆவணப் காப்பகமாக மிடுக்குடன் மிளிர்ந்தது

புத்தூர் செல்லப்பாவின் எண்ணத்தில்
வண்ணமாய்
தன் இல்லமதில்
சில நூல்களுடன்
நடாத்தி வந்த நூல் நிலையம்

விரிவுபடுத்தும்நோக்கில் செல்லப்பா அவர்களும் பிரமுகர்கள் இணைந்தே
வாடகைக்கு பெற்ற
சிறிய அறையொன்றில் நூலகம் இயங்கியதே

செல்லப்பாவின் சிந்தனையே
அத்திவாரம் கட்டடமாக எழுந்தது
நூறு நூல்களுடன் இயங்க தொடங்கிய அறிவாலயம்

1936 ஆண்டினிலே
யாழ் நகரசபையில் ஒப்படைத்து
இரண்டு தளம்
கொண்ட
அழகிய கட்டடம்
வடிவமைக்கபட்டதே

1959 இல் யாழ் மேயராக கடமையாற்றிய
அல்பிரட் துரையப்பா
அறிவாலயத்தை திறந்து வைத்தாரே

1981 யூன் 31
இரவு
சிங்கள வன்முறை குழுவொன்றால் நூலகத்திற்கு தீ மூட்டப்பட்டது
இதுவே
இனங்களுக்கு இடையிலான கலவரத்தை மூட்டிய தீயாக மாறியதே
முடிவில்லா தீ ஆக
மூண்ட தீ ஆக தொடர்கிறதே!!

நன்றி வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading