சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் __54

” வீரப் பெண்ணவள்”

ஆற்றல் கொண்ட பெண்ணவள்
பாமுகத்தில் பல விதமான
விதைகளை விதைத்து விந்தை செய்பவள்
விண்ணையும்
அதிர வைப்பாள்
பண்ணோடு பாடுவாள்!!

படைப்புக்களை
படைத்து
மற்றவர்களையும் மகிழ வைப்பாள்
சுற்றவர்களும்
சூழ்ந்திருக்க
சுகமும் காணுகின்றாள்
சுந்தரி

தனக்கென வாழாது
சமூக நலன் கருதி
நாற்று நடுகின்றாள்
நற்பண்புடன்

வீரப் பெண்ணவள்
வெற்றி நடை போடுகின்றாள்
வீண் பொழுது
போக்காது
உற்றவர்களையும் உறவுகளையும்
தேசம் கடந்து
சேர்த்து வைக்கும்
சேவை மனம் உவந்த
செந்தமிழ் செல்வி
வாழும் போது
வாழ்த்துவோம்
மனம் உவந்து போற்றும்
வீரப் பெண்ணவள்
ஜெயா நடேசன்
அவர்கள்!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading