அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

அறிவின் விருட்சம்

ஜெயம் தங்கராஜா அறிவுக்கு இதுவொரு விருந்து அறியாமையை நீக்கிடும் அருமருந்து புத்தியை எட்டவைக்கும் பெட்டகம் வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம் வாசித்தால்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 125

“தீப ஒளியே”

தீப திருநாள்
ஞானத்தின் பெருநாள்
ஊர் கூடி
உறவு கூடி
உன்னதமாய் கொண்டாடிய பொன்னாள்
நன்னாள்!

தீபாவளி அன்று புத்தாடை அணிந்து
பூத்திருப்போம் புது பூலிவுடன் காத்திருப்போம்!

ஆட்டு இறச்சி
பனை ஓலையில் சுத்தி
ஒரு பங்கு
வீடு தேடி ஒடி வரும்!

அம்மா காரசாரமாய்
சுவையாய் சமைத்திடுவா மூக்கு ஒழுக துடைத்து துடைத்து
உண்டு மகிழ்ந்த காலம் அது ஒரு காலம்!

இன்னும் நினைக்க நினைக்க இனிக்கிது
மாலையில் எள்ளு மோதகம் சுவைத்து உண்டு!

உடன் பிறப்புக்கள்
நண்பிகளுடன் மாலை முழுதும் விளையாட்டு
மகிழ்ந்து இருந்த காலம் அது ஒரு ஞாலம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan