புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி வாரம்__129
01.12.23
“கலவரம்”
எண்பத்தி மூன்று கலவரம்
வாள் நோக்கும்
வள்ளுவர்
நிலை குலைந்திருக்கும்
ஔவையார்
கலவரம் வெடித்ததை
புத்தகத்தில்
பாத்த
நினைவு இன்னும்!
நூல்நிலையம் அழிப்பு
குட்டிமணி தங்கத்துரை
சிறைச்சாலையில்
வதைப்பு சிதைப்பு
அடிக்க அடிக்க
ஓடிய சிங்கள தேசம்
அயல் நாட்டவரை
கை உதவிக்கு
கை கோத்து
காக்கை வன்னியன் கூட்டம் காட்டி கொடுக்க
எம் இனத்தை சிதைத்ததே
அழித்தே!
தியாக தீபம்
திலிபன்
அகிம்சை வழியில் சொன்ன செய்தி
அன்று மக்களுக்காக புலிகள்
இன்று மக்களோடு புலிகள் நாளை மக்களே புலிகள்!
2009 மௌனித்த
மாவீரர் தினம்
2023 சூடு பிடித்ததே
சூட்டை கிளப்பியதே
தமிழினத்தின்
உணர்வு கொந்தளிப்பு
கோலாகலம்
கோலமிட்ட
மாவீரர் நாள்
அடங்கி கிடப்பதும்
அழகல்ல
அழுகுரல் கேட்பதும் சகிப்பல்ல
அகிம்சை வழியில் போராடி
கலவரத்தை
காலத்தில்
காலாவதி செய்திடுவோம்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
