” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 284 ]
“ஆசான்”

தாரமுங்குருவும் தலைவிதிப்பயன்
ஆசான் அமைதல் இறைவன்கொடுத்த வரம்
நாடெங்குமின்று இலவசக்கல்வி
முயற்சியுடை மாணவர்க்கு சிறந்தபெறுபேறு

ஆசிரியர் தம்கடமையை சரிவரநிறைவேற்றுகிறாரா?
தனியார் கல்விநிறுவனங்கள் பணம் குவிப்பது ஏன்?
அரசஆசிரியர்கள் தனியார்கல்விநிறுவனங்களில் கற்பிக்க அரசு தடை!
ஆசான் கற்பித்தலுடன் பல்வேறு துறைகளிலும் முன்னிலை வகிப்பவர்

சுயநலநோக்கமற்ற ஆசான்களின் தோற்றம்
சமுதாய முன்னேற்றத்தின் வெற்றியில் ஏற்றம்
பள்ளிக்காலத்தில் கற்பித்த ஆசிரியர்கள் மனதில் ஓட்டம்
நல்லாசிரியர் முகங்கள் நெஞ்சில் என்றும் நிழலாட்டம்

அவர்தம் அளப்பரிய சேவைகண்டு நன்றி பெருக்கெடுக்கும்
தமது குழந்தைகளாய் மாணவரை எண்ணிச்செயற்பட்டவர்
அவர் தமை இறைவனாய் எண்ணிப்போற்றுதல் தகும்
ஆதலால் ஆசான் மாணவர் வாழ்வில் வெற்றிஏணி!

“நன்றிமறவா அகில உலகமும் ஆசிரியதினம் கொண்டாடுகிறார்கள்.”

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan