கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 178

“காலத்தின் அலங்கோலம்”

நாடெங்கும் பட்டினிப் பேயின் தாண்டவம்
பாலர் பசி தீர்க்கத்திணறும் தாய்மாரின் ஓலம்
அரிசியிருந்தது பருப்பிருந்தது பொங்கிப்போட எரிவாயுவுமிருந்தது ஆனால் இன்றோ
அரிசியில்லை பருப்பில்லை எரிவாயுவுமில்லை
வளவுக்குள் குவிந்திரிந்த விறகு தெரிந்தது
விறகினருமை தெரிந்த போது பண்டமெதுவும் கையிலில்லை
பாழாய்ப்போன ஆட்சியாளர்! பாவி தலை உருளாதோ?
அத்தியாவசியப் பொருள் எதுவுமின்று கையிருப்பில்லை
பாரெங்கும் பண்டங்கள் நிறையவுண்டு
பார்த்து வாங்க கையில் பணம் வேண்டும்
அரசிடமோ நிறைய கடனிருக்கு, பணமில்லை
பொய்யும் புரட்டும் மட்டும் மலையாய் குவிந்திருக்கு.
நம்பி ஏமாந்த நாட்டு மக்களே அஞ்ச வேண்டா.
வெகு விரைவில் அரசு தரும் இலவசமாய் …”பட்டினிச்சா”

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading