புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
சிவா சிவதர்சன்
[ வாரம் 242 ]
“நீரிழிவு”
நோயற்றவாழ்வே குறைவற்றசெல்வம்
நள்ளிரவில் தாக்கும் பகையை ஒக்கும்
அறிகுறி காட்டாது மறைந்து தாக்கும் சலரோகம் நீரிழிவு,சக்கரைவியாதி, சலரோகம்,மதுமோகம்
எதுஎப்படி அழைப்பினும் கவனமின்றேல் காவுகொள்ளும்
நீரிழிவின் தாக்கங்கண்ட சர்வதேசத்தின் சலரோக விழிப்புணர்வு நாளாம் கார்த்கை 14.
உடல் தொழிற்பட உணவு தரும் மாச்சத்து சக்திதரும்
செரிமானமாகா மாச்சத்து உடலில்தேங்கி நீரழிவுக்கு வழிசமைக்கும்
நம்பிரதான உணவோ மாச்சத்து,சோறும் கிழங்குவகையுமாகும்
உடல் வருந்தித்தொழில் புரிய மாச்சத்தால் வரும் ஆபத்து தவிர்க்கப்படும்
நோயின் அறிகுறிகள் உடற்சோர்வு, அடிக்கடி சிறுநீர்போக்கு,பார்வைமங்குதல்,எடைக்குறைவு,தாகம்,நாவரட்சி என்பனவாகும்
அறிகுறிகளை அலட்சியம் செய்யின் மாரடைப்பு,சிறுநீரகசேதம்,நரம்புத்தளர்ச்சி போன்ற விளைவுகள் ஏற்படலாம்
நிறையுணவுப்பழக்கம் உணவில் பாகற்காய், கீரைவகை,நெல்லி,கறுவா,வெந்தயம்,மாந்தளிர் ஆகியவற்றைச்சேர்த்தல்,அசைவமாயின் மெலிதான இறைச்சி,மீன், முட்டைவெள்ளைக்கரு, பால் என்பவற்றோடு தானியங்கள்,பருப்பு, விதைவகைகள் உணவில் பிரதானமாம்.
நடைப்பயிற்சி,உடற்பயிற்சி,யோகா-தியானப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு சோம்பல் தவிர்த்து சுறுசுறுப்பாய் உடலை இயக்கினால் சலரோகம் முழுக்கட்டுப்பாட்டில் வந்துசேரும்
வைத்திய உதவியையும் தொடர்ந்து நாடவேண்டும்.
“நீரிழிவை கண்டறிவோம்,போராடுவோம் ஆனந்தமான வாழ்வுக்கு வழிசமைப்போம்”
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
