சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை-159
பரவசம்

பிரபஞ்சம் எங்கும்
பரந்து கிடக்கின்றது
எண்ணில் அடங்கா பர வசம்
பார்க்கும் இடம் எங்கும் நோக்க நோக்க
இயற்கையின் பர வசம்
பல்லுயிகளுக்கெல்லாம் பர வசம்

மலை முகடுகளுக்கு ஆகாயம் பர வசம்
மண்ணின் முத்தம் மழையின் பர வசம்
வீசும் தென்றல் தென்னைக்கு பர வசம்
கரைவந்து மோதும் அலையின் பர வசம்

கூவும் சேவலிற்கு விடியல் பர வசம்
தோகை விரித்தாடும் மயிலின் பர வசம்
படமெடுத்தாடும் பாம்பின் பர வசம்
மூங்கிலின் நாதம் வண்டுகளின் பர வசம்

எமக்குள்ளும் எண்ணற்ற பர வசம்
அவரவர் மனங்களின் நெகிழ்ச்சியில்
பெண்மைக்கு தாய்மை பர வசம்
தாயின் அணைப்பில் சேய்யின் பர வசம்
தந்தையின் தோழில் பிள்ளையின் பர வசம்

பக்தனின் பக்தி முத்தினால் பர வசம்
மாணவன் சித்தி எய்தினால் பர வசம்
பெரும் பொருள் கிடைத்தால் பர வசம்
பரம் பொருள் அடைந்தால் பர வசம்
அதுவே வாழ்வில் ஆனந்தப் பர வசம்

ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading