ஜமுனாமலர் இந்திரகுமார்

விடியல்
இரவு பகலாக
இருளும் ஒளியாக
காதல் கனிவாக
கன்னி தாயாக
மழலை வரமாக
மௌனம் மொழியாக
சொல்லும் கவியாக
நெல்லும் கதிராக
கல்லும் சிலையாக
இலையும் சருகாக
காடும் வீடாக
பாலை சோலையாக
மாரி கோடையாக
அழுகை சிரிப்பாக
கனவு நனவாக
மௌனம் மொழியாக
மொழியும் தொடர்பாட
மாறும் மாற்றத்தில்
விடியல் காண்கிறது
வாழ்வியல் வட்டம்

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading