ஜெயம் தங்கராஜா

கவிஞன்

சின்னச்சின்ன அழகைக்கூட அவன் விழிகள் உள்வாங்கிவிட மறக்காது
தன் சிந்தனையை விரித்து சத்தான வார்த்தைகளை பொறுக்கி கிறுக்கி வரிகளாக்கிவிடுவான்
சொல் வித்தைக்காரன் தன் வார்த்தை விளையாட்டால் மனங்களை தன் இஸ்டத்திற்கு வசப்படுத்திவிடுவான்
தனிமை உலகுள் சஞ்சரித்து பல இனிமைத் கவிதைகளை சுகமாக பிரசவித்தும் விடுவான்

சமுதாயப் பழுதுகளை இவன் எழுதுகோல் உழுதுவிடும்
தன் தாய்மொழியை உயிராய் நேசிப்பவன் சுவாசிப்பவன் பூசிப்பவன் இவன்
வளைந்துகொடுக்காது நிமிர்ந்துநின்று வாய்மையை உச்சரிப்பவன்
தன் உணர்வுகளை மறைக்காது நன்கு உறைக்கவே உரக்கவே உரைப்பவன்

எவரும் காணமுடியாத அறியாவுலகை தன் கற்பனைகொண்டு கண்முன்னே படைப்பான் இவன்
என்றும் வாழும் வார்த்தைகள் தந்து நிரந்தரமானவன் என்றுமே அழியாதவன்
பகுத்தறிவை பறைசாற்றுவான் சமகாலங்களுள் ஆர்ப்பரிப்பான்
அழகான பொய் சொல்லிடினும்
மெய்களையும் ஒளிக்காது காட்சிப்படுத்துபவன்
சொற்களை செதுக்கிக்கோர்த்து சந்தங்களால் மொழியை அமுதாக்கும் கவிஞன் நல்ல கலைஞன்

ஜெயம்
18-04-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading