புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
ஜெயம் தங்கராஜா
கவி 712
உன்னிடம் உண்டு என்னிடமும் உண்டு எங்கென்பதுதான் தெரியவில்லை
அன்றென்ன இன்றென்ன என்றுமிது நிறைவு காண்பதில்லை
பொன்கிடைத்தாலும் மண்கிடைத்தாலும் அமைதி அடைவதில்லை
அது இல்லை இது இல்லையென அடங்காதே அலையும்
புதுப்புது கவலைகளை வரவழைத்து நித்தமுமாய் நிலை
sac eastpak fsu football jersey custom dallas stars jersey custom maple leafs jersey sit top kayak custom youth hockey jerseys custom stitched nfl jersey fsu football jersey custom maple leafs jersey custom nfl football jerseys custom nfl football jerseys black friday wig sale penn state jersey black friday wig sale sac à dos eastpak
குலையும்
இல்லாததை முன்நிறுத்தி குடைந்துகொண்டே இருக்கும்
எல்லோரிலும் சந்தேகப்பட்டு சத்தம் போடாமல் சந்தோசத்தை விரட்டும்
கோவப்பட்டால் வானத்திற்கும் பூமிக்குமாக எகிறிக்குதிக்கும்
பாவமூட்டையை சுமந்துகொண்டு வெளியில் காட்டாதபடி நடிக்கும்
பிடரி விறைக்க அடியும் வாங்கி குப்பற வீழ்ந்து மவுணமாகும்
பிறகு எழுந்து அவமானம் மறந்து ஆட்டம் போடும்
பணத்தைக் கறக்க பகைவனையும் நண்பனாக்கிக் கொண்டாடும்
தனக்கென்று வரும்போது அடுத்தவரைக் கவிழ்க்க திட்டம் தீட்டும்
புகழுக்காக பல்லிளித்து வெட்கம் மானம் சூடு சுரணைகளை அடகுவைக்கும்
இகழ்ச்சி வருமோவென்றால் பெட்டிப்பாம்பாய் அடங்கி ஒடுங்கும்
அபகரிக்கவேண்டிவரின் சொத்தை சொந்தத்தையும் நடுரோட்டில் நிறுத்தும்
இருப்பவனைப் பார்த்தும் உள்ளவனைப்பார்த்தும் கூழைக்கும்பிடு போடும்
தேவை முடிந்துவிட்டால் கொஞ்சிக்குலாவுவதை நிறுத்திவிடும்
நாவை கொஞ்சவைத்து அவதூறுகளை இரகசியமாகவே பரப்பும்
தான் தானென தம்பட்டமடித்து தன் வட்டத்தை சிறிதாக்கும்
மாண்பினை தொலைத்து அலைக்கழிந்து தினத்தை சிரிப்பாக்கும்
உருவமற்று இருந்து ஆட்டிப்படைக்கும் இது பிசாசு தானா
உருகி வணங்கும் இறைவனின் பக்தனும் இதற்கு அடிமைதானா
உடலுளுள்ள அனைத்து உறுப்புக்களும் மனிதன் கட்டுப்பாட்டில்
கடந்துசெல்லும் வாழ்வின் ஆட்டமோ இது பாடும் பாட்டில்
ஜெயம்
21-02-2024
