புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பெண்

ஆணுக்கு துணையாய் மட்டுமே அன்று
ஆணுக்கு இணையாய் அகிலத்தில் இன்று
என்னென்று எப்படி சொல்வது பெண்மையை
பொன்னென்றும் பூவென்றும் சொல்வதா உண்மையை

பண்படாத மனிதர்களால் பட்டாலும் வேதனை
மண்ணிலும் விண்ணிலும் செய்தாளே சாதனை
பாவையென்றால் பொம்யாகப்பார்த்தவரும் முன் நாளிலே
நாவையடக்கி பெட்டிப்பாம்பானார்கள் பின் நாளிலே

பெற்று பேணி வளர்த்தவர் எவர்கள்
கற்றுத் தந்து மகிழ்ந்தவர் இவர்கள்
பெருமைப்படுத்திவிட உலகில் ஒரு பிறவி
உருவாக்கி ஊட்டிவிடும் அகிலத்தின் இறைவி

அழகுடன் அழகு சேர்ந்துவிடும் தன்மை
பழகிவிடும் பண்பதில் மலரினும் மென்மை
மங்கையின் அன்பினாலே மானுடமே தழைத்திடும்
சிங்கப்பெண்ணாய் சாதிப்பவை சரித்திரமாய் நிலைத்திடும்

ஜெயம்
01-06-2024

Nada Mohan
Author: Nada Mohan