மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

படைப்பாளிகளின் படைப்பாளியிவர்

கவிஞர்களை ஊக்குவிக்கும் உன்னத உழைப்பு
கவிகளை சந்தத்துடன் ஆக்கிவிட அழைப்பு
மடைதிறந்த வெள்ளமென பாவலரும் முண்டியடித்து
படைத்திடுவார் பாக்களை சந்தங்கள் வடித்து

வேறுபட்ட தலைப்புக்களில் ஒவ்வொரு வாரமும்
மாறுபட்ட போதிலும் குறையாது காரமும்
கருத்துக்களோ பஞ்சமின்றி வரிகளுக்குள் தாராளம்
அருமையான ஆக்கங்களுள் தத்துவங்கள் ஏராளம்

பாவை தூக்கிவைத்து கொண்டாடுவார் பா.வை.ஜெ
தேவை என்றென்றும் பாவேந்தர் சேவையே
அள்ளியள்ளி வழங்கிடுவார் அளவில்லாத பாராட்டு
சொல்லப்போனால் மனமதுவும் கூத்தாடும் அதைக்கேட்டு

வற்றிய கிணற்றிலும் நீராக ஊறியது
அற்புதம் நிகழ்ந்து நிலமை மாறியது
புதுப்புது படைப்பாளிகள் எழுதியே பாமுகப்பூக்களில்
புதுமைகளாய் படைக்கின்றார்கள் தங்களது பாக்களில்

பிணிகள் நெருங்காத வாழ்க்கையை வாழ்ந்து
பணியினை நெடுங்காலம் தொடர்ந்திட வாழ்த்து
கலைக்கான அர்ப்பணிப்போ அன்றுதொட்டு இன்று
கலைமகள் ஆசீர்வாதம் உமக்கென்றும் உண்டு

ஜெயம்
04-08-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading