வரமானதோ வயோதிபம் 53
” வரமானதோ வயோதிபம் “
ஜெயம் தங்கராஜா
கவி 609
அண்றிட்ட தீ
தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியத்திற்கு அண்றிட்ட தீ
தெற்கிலங்கையில் இன்று எரிகின்றது
நாற்பத்தியொரு ஆண்டுகள் கடந்தாலும்
கர்மாவின் வலிமை புரிகின்றது
மிகப்பெரிய அறிவியல் பொக்கிஷம்
கண்முன்னே எரிந்து சாம்பலானது
சுகப்பட்டுக் கொண்டார்கள் புத்தரின் பக்தர்கள்
அது அறிவேயற்ற ஜீவராசிகளின் செயலானது
தொண்ணூற்றேழாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள்
சிறப்புமிக்க ஓலைச் சுவடிகள்
தன்னிகரில்லா நூலகம் தாங்கிய அறிவுச் சொத்துக்கள்
எரிந்து சாம்பலாகிய கொடிய நொடிகள்
அறிவழிப்பு செய்வதாக மூடர்களின் வன்முறை அதன்
பலனையின்று அனுபவிக்கிறார்கள் அவர் தலைமுறை
இனவெறி குண்டர்கள் செயய்திட்டாரன்று துவம்சம்
அதற்கு தண்டனையோ நடுவீதியில் இன்றவர் வம்சம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா இதை
அறியாத அறிவிலிக் கூட்டம்
யாதும் ஊரே யாவரும் கேளிர் அறிந்திருந்தால்
நிகழ்ந்திருக்காதன்றோ இனவொழிப்பாட்டம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
இப்பொழுதுதான் வந்தது அந்த நிலையும்
பெரும் வரலாற்றுத் தவற்றை இழைத்தார்கள் அன்று
அதற்கான பயனை அனுபவிக்கிறார்கள் இன்று
ஜெயம்
08-06-20022
