இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு?!!!

வியாழன் கவி-2383!! ஆட்டிப் படைக்கும் ஆளுமை தான் இங்கே அள்ளி இறைக்குறார் நீரிலும் எளிதாய் துள்ளி எழுந்து குளிர் நீராடி உழைத்ததை அள்ளி...

Continue reading

03.09.26 இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு 2057 ஜெயா நடேசன

பணத்தை இறைப்பதில் நன்மை தீமையுமே தேவை அறிந்து விதை பலனே சேமித்து இறைப்பில் கஞ்சனே பணம் உழைப்பில்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 613

மனமே மனமே

உருவமற்ற ஒன்றாக  எங்கோ இருந்து ஆட்டிப்படைத்திடும் மனமே
நீ எண்ணிய எண்ணமே வாழ்கையுமாகி  மண்ணோடு கழியுது தினமே
விழிப்பிலே நினைவுகள் உறக்கத்தில் கனவுகள் எல்லாமும் இதனது செயற்பாடே
சோகங்கள் வாழ்க்கையில் கூடுவதும் சந்தோசம் அறிமுகமாவதும் இதனூடே

மனம் தூய்மையும் நேர்மையும் ஒழுக்கமும் கொண்டால் ஆலயம் என்பதும் எதற்கு
போட்டி பொறாமை வஞ்சகம் கொண்டால் நோய் பிடித்திடும் அதற்கு
கல்லாகவிருந்து கல்லாது எதையும் ஆட்டிவித்து ஆடவும் வைக்கும்
நல்லதை நினைத்து நல்லதைச் செய்து நிலைதனை மாற்றியும் மெய்க்கும்

அந்த மலையிலும் உயரமான இந்த சமுத்திரத்திலும் ஆழமான மனம் அதிசயமே
பாசமென்றும் வேடமதும் போட்டிடும் மோசம் செய்தும் கக்கிவிடும் விசமே
இருப்பதோ ஒரு மனம் அதனுடன் நடத்தும் போராட்டம் ஓய்வதில்லை
ஆயுள்வரைக்கும் ஆட்டிப்படைக்கும் இந்த மனமே ஆண்டுவிடும் வாழ்க்கையின் எல்லை.

ஜெயம்
13-07-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading