திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி..

வியாழன் கவி-2375!!!
மண்ணைப் பிளந்துமே
கொள்ளும் வைரமும் நிலக்கரி
எண்ணற்ற யாவும் பெறவே
எத்தனை முயற்சியும் கொள்வார்

வானை முட்டி எழும்
கட்டடம் நிமிர்ந்து நிற்கும்
விண்வெளி தாண்டிய பயணம்
உலகையே வியக்க வைக்கும்

கின்னசில் சாதனை படைக்க
கிட்டுமே பயிற்சி ஊக்கம்
எண்ணமே உயர்வின் வேராம்
எழுந்திடும் சிறப்பே பயிற்சி

இறப்பிலும் பெயரைப் பொறித்து
இருப்பவர் புகழில் நனைய
அறிவுடன் முயற்சி பயிற்சி
இறைவனும் துணையே என்பர்..
சிவதர்சனி இரா
19/8/2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading