ஜெயம் தங்கராஜா

கவி 624

துப்பாக்கி ஒன்றின் அகிம்சைவழி போராட்டம்

உரிமைகளை அரச பயங்கரவாதம் மிதித்தது
விடியலைக் காணாது தண்டனை விதித்தது
அடிமையாய் கிடந்து தவித்தது காலம்
அடியினை வாங்கியே கரைந்தது கோலம்

பொங்கி எழுந்தது இளைஞர்கள் கூட்டம்
அக்கினிப்பிழம்பாக இருந்தது அவர்களின் ஆட்டம்
பொறுத்தது போதுமென கொண்டாரே காட்டம்
புறமுதுகிட்டு எதிரிகள் எடுத்தாரே ஓட்டம்

குட்டக்குட்ட குனிந்துகொண்ட ஓர் இனம்
முட்டியே மோத தான்கொண்டது சினம்
தூக்கியே ஆயுதம் எதிரிக்கு குறிவைத்தது
தாக்கியே அரக்கரை வெற்றியை அறிவித்தது

புத்தரின் பூமியும் ஆட்டம் கண்டது
பற்றிய நெருப்பதால் பதட்டம் கொண்டது
பாரத தேசத்தை உதவிக்கு அழைத்தது
போரதை நிறுத்தவே இந்துமண் நுழைந்தது

ஆயுதப்போர் அவர்களால் மவுனம் அடைந்தது
ஆயினும் வந்தவதிகாரமும் அநியாயம் படைத்தது
ஏந்திய கொள்கையினால் அணைந்தது தீபமொன்று
காந்தியையும் தாண்டிய அகிம்சையின் தந்தையென்று

துப்பாக்கி ஒன்றின் அகிம்சைவழி போராட்டம்
துர்ப்பாக்கிய நிலையதால் இனமதும் வாட்டம்
நீர் ஆகாரமின்றி அணைந்ததன்று தியாகதீபம்
பார்ப்பாயோ தலைமுறை காக்கவே யாவும்

28-09-2022
Jeyam

Nada Mohan
Author: Nada Mohan