ஜெயம் தங்கராஜா

சசிச

நினைவுநாள்

தாயகத்திற்காய் அற்பணித்தாரே தம் வாழ்நாளை
நாயகர்கள் அவர்களை நினைவுகூரும் புனிதவேளை
காயங்கொண்ட நினைவுகளுடன் விடியினும் அக்காலை
தூயவர்கள் அவர்களிற்கு சூட்டிடுவோம் புகழ்மாலை

கனவு நிரம்பிய உறங்கா விழிகளோடு
உணவு இன்றி பசித்தே வழிகளூடு
இனத்திற்க்காய் பட்டனர் சீவனழிக்கும் சிலுவைப்பாடு
கணக்கில்லா துன்பங்கள் சூழ்ந்ததன்றோ அவரோடு
ஈராயிரமாம் ஆண்டிலே சரித்திரம் படைத்தவர்
போராயிரம் செய்தே வெற்றிகள் அடைந்தவர்
தீராதென்றும் ஞாபகம் வரமாகக் கிடைத்தவர்
மாறாது உள்ளுணர்வு அவர் எமக்காயுடைந்தவர்

28-11-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading