ஜெயம் தங்கராஜா

ச.சி.ச

புத்தாண்டடே வாராயோ புத்துணர்வை தாராயோ

புத்தாண்டே வருவாயே புத்தம்புது வரவாக
சொந்தமென அள்ளித்தந்து சுகந்தரும் உறவாக
சத்தான வாழ்க்கையொன்றை தந்துதவி வரமாக
ரத்தினமாய் திகழாயோ சித்தமது இதமாக

பயணமொன்று புதிதாக அவனியிலே தொடங்கவே
பயனும் பலவாய்க் கூடியங்கு அடங்கவே
பயத்தைப் புதைத்து துணிவதுவும் அரும்பவே
தயவாயாண்டு வந்திடாதோ இதயம் விரும்பவே

உருண்டிடும் உலகதன் பகையதும் நீங்க
இருள்கொண்ட உள்ளத்துள் கருணையும் தேங்க
கருவுற்று செயலுக்குள் மனிதமும் ஓங்க
அருள்தரும் அகவையதும் மாற்றங்களைத் தாங்க

ஜெயம்
19 -12-2022
https://linksharing.samsungcloud.com/9UXBnjmQCvMY

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading