ஜெயம் தங்கராஜா

விருப்பம்

எத்தனை எத்தனை விருப்பங்கள் கொண்டோம்
அத்தனையில் எத்தனை நிறைவேறக் கண்டோம்
இத்தரை வாழ்க்கையில் நிறைவானதா மனம்
மொத்தத்தில் நினைக்காதவற்றை நிகழ்த்தியதா தினம்

தனக்குப் பிடித்ததை அடைவதற்கான உணர்வு
கணக்கு பிழையாகி ஆகிவிடும் கனவு
அடைந்தாலும் அடுத்ததை நோக்கியே ஓட்டம்
கிடைக்காவிடின் உள்ளத்தில் கவலை மூட்டம்

விரும்பிய பழத்தை பறித்துமே கொள்ள
தருணங்கள் பார்த்தே இருப்போமே மெல்ல
கரும்பென வாழ்வை சுவைக்கலாம் அப்போது
வருத்தமும் வேண்டாம் கிட்டாவிடினும் இப்போது

பறந்து கொள்ளவா இறக்கைகள் கேட்டோம்
உறவுகள் மகிழ்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டோம்
இலக்கை அடையட்டுமே அரும்பிய எண்ணம்
விலங்கை உடைத்துமே விரும்பிய வண்ணம்

ஜெயம்
30-01-2023
https://linksharing.samsungcloud.com/nJnYP8nNXjfB

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading