அதிகரிக்கும் வெப்பம்
“காலம் போற போக்கைப் பாரு”
ஜெயம் தங்கராஜா
கவி 638
சுதந்திரமாமே
மனிதனை மனிதன் வகைதொகையின்றி அழிப்பது
தாராள சுதந்திரத்தின் வெளிப்பாடே
துணிந்து செய்யும் பாலியல் வன்முறை
அதுவும் இதனூடான செயற்பாடே
தனியொருவன் நினைப்பதை பேசியும் நிகழ்த்தியும்
மனம்போன போக்கெல்லாம் சுதந்திரமாமே
புனிதராய் துதிக்கவேண்டிய தாயையும் தந்தையையும்
தள்ளி வைப்பதும் இதற்காகத்தானே
கலாசாரத்துள் புதிய வரவுகளின் வருகை
கோலத்தின் காட்சியும் மாறியது
விழாவென வந்தால் குடியும் குத்தாட்டமும்
சுதந்திரம் சக்கைபோடு போடுகின்றது
குலாவி மகிழும் மானிடக் கூட்டத்தில்
சுதந்திரக் காற்றின் சுவாசிப்பு
இலாபம் என்றே பழக்கத்தில் மாற்றம்
தங்கியில்லாத தாராள வாழ்வாம்
இயற்கைக்கு முரணாக புதுமையின் படைப்புகள்
கவலைக்கிடமான பழமையும் பாரம்பரியமும்
செயற்கையாய் இஷ்டப்படி நாகரீக அவதாரங்கள்
தைரியமாச் செய்யும் பாவங்கள்
பயனென தலைமுறை களித்து வாழ்க்கையை
பஞ்சமற்ற சுதந்திரத்திடம் தஞ்சம்
நிஜமாக நிம்மதி உற்பத்தி செய்யப்படுகின்றதா
தங்காநிலை வாழ்விற்கு சுதந்திரமாமே
ஜெயம்
02-02-2023
