கணப்பொழுதில்
கணப்பொழுதில்
ஜெயம் தங்கராஜா
சசிச
நீர்க்குமிழி
வையகத்தில் நம்வாழ்வு நீர்க்குமிழி போலே
மெய்யதுவும் பொய்யதுவாய் நிலையில்லை என்பதனாலே
செய்துவிடு மானிடனே நன்றுதனை மண்மேலே
கையகப்படுத்தியதும் நம்கூட வராது அதனாலே
பூட்டிவைத்து மூச்சுக்காற்றை காப்பவர்தான் யாரிங்கே
பூத்ததெல்லாம் வாடியது உதிர்ந்துவிடும் பாரங்கே
போட்டுவிட்டால் உடைந்துவிடும் மண்பானை எனவிங்கே
ஆட்டிப்படைத்தது அடங்கிவிடும் புரிந்திடின் குழப்பமெங்கே
இந்த வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது
வந்தவர் நிலைக்கவில்லை கண்கூடான சான்றது
விந்தையான படைப்பெனவே மனிதகுலம் தோன்றுது
தந்துவிட்டு பறிப்பதற்கே விதியதுவும் ஈன்றது
அற்பமும் இதுவாக அற்புதமும் இதுவாக
பற்றிப்பிடித்தாலும் தள்ளிவிடும் ஒருநாள் அதுவாக
இற்றைவரை புரியாத பொருளெனவே உண்மையதுவாக
சற்றும் எதிர்பாராதே நொறுங்கிவிடும் பொம்மையதுவாக
ஜெயம்
24-03-2023
https://linksharing.samsungcloud.com/jRzy3wI7RZjF
