ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வரம்-10.10.2023
இலக்கம்-236
அலை ஓசை
—————//———
காற்றலையின் ஓசை
காதிற்கு இதமாக புகுகிறது
தினமும் நிகழ்வின் அலையோசை கேட்க வைக்கிறது
கடலில் உருண்டு பிரண்டு அலையோசை
காதலரை மகிழ வைக்குது
பாடும் குயிலின் குரலோசை
பண்ணிசையாளர்க்கு
பாடம் சொல்லி கொடுக்குது
கோயிலின் அதி காலை
மணியோசை
கடவுளை நினைத்து கும்பிட வைக்குது
விடியலில் சேவலின் கூவும் குரலோசை
படுக்கையை விட்டு எழும்ப வைக்குது
வீட்டை காக்கும் நன்றி
நாயின் குரலோசை
களவுகள் தேடும்
இராக் கள்வரைக் காட்டி கொடுக்குது
செவ்வாயில் இடம் பெறும் கவி ஓசை படிப்பு
கவிஞரின் உள்ளத்தை வாரி எடுத்து எழுத தூண்டுது
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading