நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே

குறுகிய பாதையில் நீண்டு
தொடரும் மனிதர் வாழ்வோ
மாறி மாறியே அச்சுறுத்தும்
காலநிலை கடலலையோடு
கவலைக் கண்ணீர் படருதே

தினந்தினம் வெவ்வேறு சவால்
மனங்கலங்கும் மழை நீரிலேயே
பெரு வெள்ளம் கனவெறியோடு
துரத்த மண்சரிவுப் புதைகுழியில்

புதைந்த மாந்தரும்,சிதைந்த வீதி
பாதி பிளந்து ஊரோடு ஓடிய நீர் –
ஊற்றும் கூறு போட இரவிரவாக
தூக்கமின்றி சிணுங்கிய சிறுவர்,
அனுங்கிய முதியோரும் தவிக்கும்
நிலைதான் மாறிடுமா? மாறிடுமோ?

Author: