கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

17.01.2022

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -206
தலைப்பு !
“தைமகளே”

தைமகளே வருகவே
தரணித்தாய் மகிழவே
வைமகளே வாழ்வையைம்
வளர்பிறையாய் வளரவே

உலதாய் மடியினிலே
உலாவரும் குழந்தைகளின்
பலவண்ண கனவுகளும்
புலர்ந்திட வருகவே

வறுமையும் பஞ்சமும்
வண்ணமாய் மாறவும்
சிறுமையின் எண்ணமும்
சிகரமாய் உயரவே

இறந்ததெல்லாம் போதுமே
இழப்பதற்கு ஒன்றுமில்லை
பிறந்துநீயும் வந்திடுவாய்
பிரபஞ்சம் காத்திடவே

நோயும் நொடியுமாய்
நொந்த உள்ளங்களும்
வாயுவின் பிடியினிலே
வதம்செய்த பிணிஒழிக்க

தைமகளே பிறந்துவா
தைரியத்தைக்்கொண்டுவா
பூமகளே புன்னகையும்
பூரிப்பையும் கொடுக்கவா !

நன்றிகள் 🙏🙏🙏
கவிப்பார்வை .. தட்டிக்
கொடுப்புக்கும் …என்
மனமார்ந்த நன்றிகள் பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan