திருமதி சிவமணி புவனேஸ்வரன்

******பாமுகமே வாழி*****

மழலை மொழியில் மகிழ்தமிழ் கானம்//
விழவுகள் பொன்னில் விரும்பும் அரும்பு//
பழந்தமிழ் போற்றிடும் பாமுகம் எம்மில்//
நிழலாய் தொடர நிலைத்து.

பைந்தமிழ் பாமுகப் பார்மகள் தீபமாய்//
வையகம் வாழ்த்திட வான்குன்றில் நின்றொளிர //
மையலும் கொண்டே மயங்கிய மாந்தரும்//
கைகூப்பி நின்றாரே காண்.

நாவலர் பேணிய நற்றமிழை நாளுமே//
தேவரீர் பாமுகம் தேசத்தே காத்திட//
ஆவலால் ஆக்கம் அனுதினம் ஆற்றவே//
பாவலர் போற்றிடப் பாங்கு.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading