01
Oct
நம் வாழ்வின் வேர்கள் (தொடர்ச்சி)
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
******பாமுகமே வாழி*****
மழலை மொழியில் மகிழ்தமிழ் கானம்//
விழவுகள் பொன்னில் விரும்பும் அரும்பு//
பழந்தமிழ் போற்றிடும் பாமுகம் எம்மில்//
நிழலாய் தொடர நிலைத்து.
பைந்தமிழ் பாமுகப் பார்மகள் தீபமாய்//
வையகம் வாழ்த்திட வான்குன்றில் நின்றொளிர //
மையலும் கொண்டே மயங்கிய மாந்தரும்//
கைகூப்பி நின்றாரே காண்.
நாவலர் பேணிய நற்றமிழை நாளுமே//
தேவரீர் பாமுகம் தேசத்தே காத்திட//
ஆவலால் ஆக்கம் அனுதினம் ஆற்றவே//
பாவலர் போற்றிடப் பாங்கு.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.