திருமதி சிவமணி புவனேஸ்வரன்

***** இயற்கை அழகு *****

வானத்து வான்முகில்கள் வாரிவரும்
மாமழை
தேனகத்து சோலைகளாம் தேசத்தின்
கானகம்
நின்றுநீந்தும் மீன்கள் நீலக்கடல்
மன்றில்
குன்றுகளின் ஊடாய் குதிக்கின்ற
அருவி
தென்றல் ஆகி வருமே தெம்மாங்கு
காற்று
வண்டு இசைந்து பாடும் வசந்தத்தின்
பூக்கள்
உண்டு களித்தேறும் ஊர்க்குருவி
வானம்
பண்டு இசை கேட்கும் பச்சைவயல்
கழனி
அண்டம் ஆளுகின்ற ஆதவனின்
அழகும்
என்றும் எம்மையாளும் இயற்கை
இன்பம் தானே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading