அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

திருமதி -சிவமணி புவனேஸ்வரன்

***பாமுகம்***
பரவிட தமிழிசை பர்வதக் காற்றலை
உரசிட உணர்வினில் உள்ளத்தின் உவகையில்
வரமதாய் வாழ்வில் வளமதை வழங்கிட
பரவசம் பரவசம் பாமுகம் பாரினில்

முரசுகள் முழங்கிட முத்தமிழ் நாயகர்
சிரசினில் தாங்கி சிந்தையில்
போற்றிட
கரங்களைஇணைத்தே காவியம் கண்டிட
தரமதில் தனித்துவ தாரகை ஆனதே

வெள்ளி மிளிர்வில் வெண்ணிலா ஒளிர்வில்
பள்ளிச் சிறாரெல்லாம் பாகுதமிழ் கற்றிட
அள்ளி அமுதமொழி அன்னையாய் தந்திட்ட
துள்ளிடும் இன்பஒலித் தூயவள் வாழியவே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading