புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் அண்ணா!
வணக்கம் கமலாக்கா!
அனைவருக்கும் வணக்கம்.
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்- 238
17/ 10/2023.

ஆறுமனமே
“”””””””””
அளவிலதாய் வருதுன்பம் அனுபவித்தே ஆறு
ஆசைகளைக் கடந்துநிதம் அனுபவித்தே ஆறு
குளமெனவே தேக்குவன்மம் குறைந்திடவே ஆறு
குலவிழுக்கைக் களைபவனாய் குறையகற்றி ஆறு
விளக்கமிலாச் சொல்பகன்றால் வருந்திநிதம் ஆறு
விருப்பமுடன் பழியுரைத்தால் வெந்துவெந்தே ஆறு
களங்கமதைக் கற்பித்தால் கண்சொரிந்தே ஆறு
கலப்படமே செய்துவிற்றால் கலியுறுத்தும் ஆறு!

நலமழிப்பார் உடனலைந்தால் நகைக்கழுந்தி ஆறு
விலங்குவழி பொருந்திநின்றால் வீழ்தழிந்தே ஆறு
இலங்குகுண இயல்பழிந்தால் இழந்திழந்தே ஆறு
இனத்தவரை ஒதுக்கிவைத்தால் இன்பமில்லா தாறு
மலங்களுக்குள் வீழ்ந்துவிட்டால் மகேசனிடம் ஆறு
மருவிடவும் தயங்கிநின்றால் மாண்டழிந்தே ஆறு
நிலமகளின் சிறப்பிழந்தால் நிலையிழந்தே ஆறு
நீதிநெறிக் கட்டழித்தால் நிதமுழன்றே ஆறு!

ஆற்றலெலாம் அளித்தவனை அகத்திருத்தி ஆறு
அடியவராய் மாறிடவும் அன்பகத்தால் ஆறு
மாற்றமுறும் உலகிடையே மயங்கிடாமல் ஆறு
மனிதகுணம் மேன்மையுற மனமிரங்கி ஆறு
சேற்றிடைவாழ் வாயிடினும் செம்மையினால் ஆறு
செல்வவளம் ஓங்கிடினும் சேவையினால் ஆறு
தூற்றிடுவார் முன்னாலும் துலங்கிமனம் ஆறு
தூய்மையுடன் வழியமைத்த தொல்தமிழால் ஆறு!

ஆறுமனமே ஆறுமனமே ஆறுமனமே ஆறு
ஆழ்மனத்தின் ஏக்கமெலாம் அடங்கிடவே ஆறு
கூறுமுண்மை ஏற்றுணர்ந்தே கொள்கையினால் ஆறு
குழந்தையுளம் பார்த்தமைந்து குளிர்ந்துமனம் ஆறு
மீறுமனத் திருளகல மேலொளியால் ஆறு
மிரட்டலிலா மென்நகையால் மித்திரனாய் ஆறு
தூறுமழை போலுமன்பைத் துமித்துமனம் ஆறு
துயரடங்கச் சேர்த்தணைக்கும் தூயவன்பில் ஆறு!

திருமதி செ.தெய்வேந்திரமூர்த்தி.
(ஓய்வுநிலை ஆசிரியர் )
பரந்தன்,
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading