திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சித்தும் சந்திப்பு – 224

தலைப்பு – மூண்ட தீ

வேண்டுவோர்க்கு ஒளிகொடுத்து வாழவைத்த ஒளியகத்தை
வேண்டுமென்று தீமூட்டி வீழ்த்திய மூடர்களை
ஆண்டவனே அறியாயோ ஏனென்று கேளாயோ
மீண்டும் நாசங்கள் முளைக்காது நசிக்காயோ.

மாதங்கள் ஆண்டுகளாய் மறைந்து சென்றாலும்
வேதனைகள் வேர்விட்டு வாட்டத்தை வளர்க்கிறது
ஆதங்கம் அகலாது அவலநிலை தொடர்கையிலே
பூதலத்தில் ஆண்டவனே அமைதியொளி தாராயோ?

தீபத்துடன் தூயோர்கள் திருக்குறளைப் படித்திடுவர்
தீபத்தால் தீயோர்கள் திருவூரையும் எரித்திடுவர்
ஆபத்தை உணர்ந்து அன்புக்கரம் நீட்டிடுவோம்
தீபமாய் எல்லோர்க்கும் அருளொளியை வழங்கிடுவர்.

நன்றி. வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(29/05/2023)

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading