மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சித்தும் சந்திப்பு – 234

தலைப்பு – வலைப்பூ

வலைப்பூ வருகை வையகமே வரவேற்க
வரம்மாய் வம்புகளை வலைப்பூ கொடுக்க
வார்த்தைகளில் விளையாட்டு எல்லையற்றுப் கடக்க
வயோதிபம் ஒடுது வயல்களை நாடுது.

வலையை கட்டியது வரம்பை மீறவில்லை
வலைந்து கொடுத்து வியாபாரம் ஆகவில்லை
வாலிபம் கடந்தும் வரத்துக்காக வலியவில்லை
வலைப்பூ வந்ததும் விநாடியில் விந்தையானது.

முகநூலில் தற்பெருமை வலைப்பூவில் தவில்லடிக்க
தற்கொலையையும் மாபெரும் சாதனையாய் YouTube இல்பேச
What’s up இல் சில்லறைகளாய் சலங்கையொலி சிதற
Viberஇல் வாழ்த்துக்களை வையகமே வாழ்த்துது.

நிழல்கள் நிஜங்களாய் ai உருவாக்க
நியாயங்கள் நிழற்படங்களாய் நீதியற்று போக
நிம்மதியற்று பலர் நிராகதியாய் நிற்க
நிரந்தமற்ற உயிர்கள் வலையான வலைப்பூக்குள்.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
26/09/2023

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading