திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி – 88

தலைப்பு — உன்னைப் படைத்தவன்

பட்டம் பெற்றோம் பதவியில் இருந்தோம்
பந்தங்களை மறந்தோம் மந்தைகள் ஆனோம்
பதவிக்காய் பந்தயத்தில் பறந்தடித்து ஓடினோம்
பணம் வென்றது வாழ்வு முடிந்தது.

மனிதனாய் பிறந்தோர் மகானாய் வாழ்கிறார்கள்
மங்கள வார்த்தையால் மனதில் வாழ்கிறார்கள்
மகேசன் தீர்ப்பை மனதில் மதியாமல்
மனபோன போக்கில் அழையும் கால்கள்

சந்ததி சொல்லலட்டும் உன் மகிமையை
சந்தமாய் கேட்கட்டும் உன் வாழ்க்கையை
சரித்திரமாய் வாழ வழிகாட்டு மானிடா
சகலதும் உணர்வான் உன்னை படைத்தவன்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
02/06/2022

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading