திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி இல— 89

தலைப்பு — அன்றிட்ட தீ

சாளரம் என்றும் அறிவின் நூலகம்
சொர்க்கமாய் திகழும் பெரும் நூலகம்
வளர்பிறையாய் நிறைகுடமாய் இருக்கும் நூலகம்
கல்விமான்களின் வரலாற்று பூந்தோட்டம் நூலகம்.

ஆசியாவின் நூலகம் யாழ்ப்பான நூலகம்
ஆசையாய் காத்த தமிழனின் நூலகம்
ஆவேசக்காரர்கள் அன்றிட்டனரே தீயை நூல்களுக்கு
ஆண்டுகள் நாற்பத்தொன்று கடந்தனவே கால்லோட்டத்தால்.

கற்றவர் கல்லாதவர் வேறுபாடில்லை நூலகத்தில்
கனிவான வார்த்தையால் கற்பது பலவாயிரம்
இணையவழி நூலகம் கைகளிலே இருக்குது – என்றாலும்
கண்ணுக்கு மிடுக்காய் யாழ்நூலகம் என்நினைவுகளில்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
09/06/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading