சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

துளிப்பாகும் வசந்தம்

நகுலா சிவநாதன்

துளிப்பாகும் வசந்தம்

மொட்டும் அரும்பும் துளிர்க்கும் அழகே!
கிட்ட நின்று பார்க்க பேரழகு!
இட்டுக் கட்டும் மொட்டும் இன்று
இயற்கை தந்த வரமன்றோ!

துளிர்க்கும் அரும்பும் விரிக்கும் வண்டும்
களிக்கும் வண்ண காலை விடியல்
வளியின் சுகந்தம் விழியில் படவே
வெளியில் பூக்கும் வழியின் பூவே புகழ்மணம்

வாச மலராய் அரும்பும் துளிர்ப்பும்
வண்ண மயமாய் இயற்கை இன்பம்
காணக் கண்கள் குளிருது தினமும்
தானம் தவமாய் துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் 1803

Nada Mohan
Author: Nada Mohan