மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நகுலா சிவநாதன்

வெறுமை போக்கும் பசுமை

பச்சை மரங்களின் பசுமை
பார்க்கும் இடங்களின் துளிர்ப்பு
உச்சி வெயிலின் ஒளித்தொகுப்பு
ஊக்கம் தருமே உயிர்வளியும்

வெறுமை போக்கும் பசுமை
வேரின் கிழங்கும் ஆரோக்கியம்
உழைப்பின் உறுதியே ஆகாரம்
உலகில் முதன்மை விவசாயம்

பசுமை புரட்சி உலகு காணட்டும்
பார்க்கும் இடமே நீங்கமற நிலைக்கட்டும்
பச்சை மரங்கள் துளிர்க்கட்டும்
பாரில் நல்வாழ்வு ஓங்கட்டும்

நகுலா சிவநாதன்1721

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading