அறிவின் விருட்சமே..

வசந்தா ஜெகதீசன்... அறிவின் விருட்சமே... அறிவூட்டும் வித்தகமே அனுதினமும் புத்தகமே வரலாற்றுப் பொக்கிசமே வார்ப்பாகும் நூல்த்தேட்டம் சரிதத்தின் சான்றுரைக்கும் சமகால படைப்பாகும் எண்ணத்தின் சிந்தைகளை ஏற்றமுற...

Continue reading

அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

நகுலா சிவநாதன்

அகதி நாம் பெற்ற வரமா?

பெற்ற வரம் அத்தனையும்
பேறுகளைப் புரிந்தாலும்
அகதி என்ற வரம் அழியா சாபம்?
சகதிகளாய் நாடுகளில்
தங்சமென்றே அடைக்கலம்!

கொடுத்துவிட்ட முத்திரை
கொழுகொம்பாகப் பற்றினாலும்
வரமான வைரங்களும் nஐhலித்தன!

அகதி வரம் அகிலத்தில்
அனைத்துலக மட்டத்தில் உச்சம்
திகதிகள் குறித்தாலும்
திட்டமுடன் சந்ததிகள்
சாதனையின் எல்லையில்

நற்றமிழால் உயர்ந்தோம்
நன்மைகள் பெற்றோம்
சாதிக்க முனைந்தோம்
சரித்திரத்தில் பதியமானோம்.

அகதி யொரு வரமே
சகதியாக எண்ணாமல்
சரித்திரத்தில் உயர முனைவோம்.

நகுலா சிவநாதன் 1727

Nada Mohan
Author: Nada Mohan