நகுலா சிவநாதன்

ஒளியின்றி ஒளிர்வெங்கு

கதிரவன் ஒளியாலே கவலைகள் பறந்தோடும்
பதியதன் பெருமை யாவும்
பகல்போல நிலவாகும்
உதிரத்தின் உணர்வெல்லாம்
ஊற்றாக மிளிர்ந்திடும்
வதியுமிடம் வண்ணமாய் வளமுடனே
ஒளிர்வுபெறும்

நதிபோல ஒளிபரப்பு நாநிலமும் பரந்திட
கதியாக வெளிச்சமும் கண்களை மயக்கிடும்
ஒளியின்றி ஒளிர்வெங்கு நிலைக்கும்
மதியாலே மானிடமும் மங்காமல் ஒளிரும்

ஒளியின்றி ஒளிராது நம்வாழ்வு
வழியின்றி வாழ்க்கையும் நகராது
பழியின்றி நம்பயணம் பாடுகளாய் நகர
வழியொன்று வேண்டுமே வளமான ஒளியாலே!

நகுலா சிவநாதன் 1738

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading