சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நதுநசி

உதவியதால் உதைக்கும்
தேசத்தில் பிழைக்கிறோம்.
******************************
என்னிடம் அன்பு அது
எண்ணமும் கூடவே!
அணையுடைத்த ஆறு
பெருக்கெடுப்பது போல.

சிறு துரும்பு நான்
எறும்பு போல இருக்க;
கண்டு நின்று அன்று
வழிகாட்டிச் சென்றார்.

வென்று விட்டேன்.
மனதால் மகிழ்ந்து
நன்றே நடந்து நான்
சிரித்திட மகிழ்ந்தார்.

கை பழகிய செயல்
மனம் ஏற்று நடத்தும்
தொழில் இன்று நன்று
பிழைத்திடும் வழியில்.

பழைய நினைவு
வந்து மோதி என்னை
சீண்டிப் போகிறது.
சீறலும் வந்து போக.

முயன்று போராடி
முன்னே நகர்ந்திட
தடையிட்டு நிற்கிறார்.
சோம்பறிக்கு உதவி.

எப்படி நினைத்திட
இந்த தேசத்தைவரை.
ஊன்றி நடந்திட தடி
கொடுத்தவரை உதைத்தார்.

வாய்க்கு சுவையாக
வாழ்வுக்கு இதமாக
சூழல் கொடுத்து தான்
எதிர்காலத்தை பறிக்கிறார்.

நாமாகவே நாம்
முயன்று தேடினால்
நாளையும் நமக்காகவே
மலர்ந்து போகுமே!

இருப்பதை போல
தொடர்ந்து நடந்தால்
கிடைப்பதில் மாற்றம்
தானே வந்திடும் இங்கே!

நிமிர்ந்து நின்று
நிலைநாட்டிய வீரம்
விரும்பி நின்று
விதைத்த காதல்.

பழுத்த பழம் இங்கே
இனிக்கும் நன்றே!
வெம்பிப் பழுத்திடல்
சுவைக்க பிழைத்திடும்.

சேற்றில் விளையும்
தாமரையும் அல்லியும்
நெல்லும் கூடவே
மனதைக் கொள்ளையிடும்.

காட்டில் சேரும்
தேனும் கூடவே
நாகத்து நஞ்சும்
மருந்தாகிப் போகும்.

முற்றிய காய் பழுக்க
மின்னிடும் வைரமாகிட
வாழையும் குலை போட
காத்திருக்க வேண்டும்.

பொறுமை வழி நின்று
இலக்கு சுமந்து போரிட
நடந்திட வேண்டும் நாம்.
கடினங்கள் கடந்து தான்.

கரம் கொடுத்துவிட
கரம் வெட்டிவிட்டு
உணவூட்டும் தேசத்தில்
பிழைக்க உழைக்கிறோம்.
…….. அன்புடன் நதுநசி.

Nada Mohan
Author: Nada Mohan