நாதன் கந்தையா

#பஞ்சம்

வயிறொட்டி விழி பிதுங்கி
வண்ணம் அது மாறி
நெறி கெட்ட உடலிருந்தால்
பசி கொண்டு பட்டினியால் – அது
நடந்த தென்று பெயர்.

சோமாலியாவென்றால்
காமாலை யது விருக்கும்
கூழில்லா வேறு வயிற்றில்
கோரமிலம் நிறைந்திருக்கும்
உப்பிய வயிறுருந்தும்
ஒறுத்தே உணவிருக்கும்.

நீ உழைத்து உயர்ந்தாலும்
நாடு செத்துபோனதென்றால்
காடு பற்றி அதுபோகும்
கொலை களவு பெருகிவரும்
ஊழ்வினை அதுவென்று -உலகம்
வெறுத் தொதுக்கிவிடும்

பிணமொன்று தினமசையும் – பெற்ற
பிள்ளை மலக்குழியில் விழும்
அறிவு பிசகிவிடும்
ஆன்மாவும் செத்துவிடும்
போராடு தூக்கியெறி
புணர்ச்சியில் கிடந்துளறும்
பொறுப்பில்லா அரசனைத்தான்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading