நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்……..

ரஜனி அன்ரன்

நினைப்பதெல்லாம்…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 20.02.2025

நினைவென்ற ஒன்று இல்லாவிடில்
கனவுகளுக்கும் அர்த்தமென்று எதுவுமில்லை
கனவு காண்பதும் கற்பனையில் மிதப்பதும் கனவாகிட
நினைவு மட்டுமே நமக்காகிட
நடப்பதும் விடுவதும் ஆண்டவன் செயலே
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
அதிசயமே அதிசயம் தான்
ஆச்சரியம் பூச்சொரிய
ஆகாயம் குடை விரிக்கும் !

எண்ணங்கள் சிறகடிக்க ஏற்றங்கள் வலுவாக
வண்ணங்களால் வாழ்வு வளம் கொழிக்க
நினைப்பதெல்லாம் நிகழ்ந்து விட்டால்
வாழ்க்கைப் பாதையும் மாறிட
வாழ்வே சொர்க்கமாகி வனப்பாகுமே !

நிறைவேறா ஆசைகளும் நிறைவேறும்
கறை படிந்த மனசுகளும் கலகலக்கும்
நித்திலமும் புத்தெழிலைப் பெற்றிடும்
நீல வானத்தையும் தொட்டிடலாம்
கால நதியினிலும் நீந்திடலாம்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

Continue reading