நினைவுகள் கனக்கின்றன ( 740)

நினைவுகள் கனக்கின்றன செல்வி நித்தியானந்தன்

கார்த்திகை வருகையில்
கடந்தகால நினைவுகள்
காலங்கள் மீளுகையில்
கனமாய் வாட்டிடும்

மறவரின் தியாகங்கள்
மாவீரனின் சான்றுகள்
மழையும் மலருமாய்
மண்ணிலே சேர்ந்திடும்

இனமதை மொழியதை
காத்திட்ட செல்வங்கள்
தம்முயிரை துச்சமென
எண்ணிய வீரர்கள்

காலத்தால் அழியாத
காவிய நாயகர்கள்
காலமெல்லாம் மறவாது
காசினிலே போற்றிடுவோம்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading