நினைவுகள் கனக்கிறதே…

வசந்தா ஜெகதீசன்
நினைவுகள் கனக்கிறதே…
வேரோடு விழுமியங்கள் வேரறுத்த கோரம்
விடுதலையின் உயிர்த்தியாகம்
வேதனையின் பாரம்
அனுதினமும் அலைமோதும் அவலத்தின் காலம்
ஆறாத வடுவாகி அழிவுகளே பேசும்
நினைவுகளில் கனக்கிறதே நீண்ட போர்க்காலம்
நித்தமும் அழிந்தொழிந்த தாயகத்தின் தாகம்
காணாமல் போனோரின் உடலங்களின் மீட்பு
உருக்குலைந்த எலும்புக்கூடுகளே தீர்ப்பு
குண்டுமழை ஷெல்வீச்சு கொன்றழித்தார் அன்று
பள்ளியிலும் சிறைகளிலும் வீதியிலும் அழிப்பு
இராணுவத்தின் கெடுபிடியால் பெண்கள் நிலை தவிப்பு
கண்ணிவெடி முட்கம்பி முடக்கத்திலே வாழ்வு
ஓயாத போர்வதையில் ஓலங்களின் ஓசை
உறவுகளும் ஊரவரும் இழந்திட்ட காயம்
ஆறாத வடுவாகி அனுதினமும் கொல்லும்
மாவீரம் மனிதத்தின் மண்மீட்புதியாகம் நினைவோடுநிதமாகிநித்திலத்தில்நீளும்!நன்றி

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading